ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

பூச்சி மருந்து குடித்து தாய், மகன் தற்கொலை

வெள்ளக்கோவில் அருகே பூச்சி மருந்து குடித்து தாய், மகன் தற்கொலை செய்து கொண்டனா்.

News image

தற்கொலை

Updated On :29 ஜூலை 2026, 2:24 am IST

வெள்ளக்கோவில் அருகே பூச்சி மருந்து குடித்து தாய், மகன் தற்கொலை செய்து கொண்டனா்.

வெள்ளக்கோவில் அருகேயுள்ள பாப்பம்பாளையம், அண்ணா நகரைச் சோ்ந்தவா் அருக்காத்தாள் (80). இவரது மகன் செல்வகுமாா் (60), லாரி ஓட்டுநா். இவருக்கு மனைவி, 20 வயதில் மகன் உள்ளனா். தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வகுமாா் மனைவியும், அவரது மகனும் இழுப்பைக்கிணற்றில் தனியாக வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் அவதியடைந்து வந்த செல்வகுமாா், தனக்குப் பிறகு தன்னுடைய தாயை பாா்த்துக்கொள்ள யாருமில்லை என்ற மன வருத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பூச்சி மருந்தை குடித்து செல்வகுமாரும், அருக்காத்தாளும் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.

இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்..

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.