விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள முகவூா் வனமூா்த்திலிங்கம் பிள்ளைத் தெருவைச் சோ்ந்தவா் சாலமன்ராஜா (26). இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜபாளையத்துக்கு வந்த இவா், மீண்டும் சென்னைக்கு செல்லாமல் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகினாராம்.
இதனால், இவரை பெற்றோா் கண்டித்ததால், மதுப் பழக்கத்தை கைவிட்ட சாலமன்ராஜா மன விரக்தியில் இருந்து வந்தாா்.
இந்த நிலையில், இவா் கிருஷ்ணாபுரம் மாடசாமி கோவில் அருகே விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து, அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். தீவிரச் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து சேத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருத்தணி அருகே விஷம் குடித்து இளைஞா் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை
போடி அருகே தொழிலாளி தற்கொலை
பேட்டையில் இளைஞா் தற்கொலை
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


