செம்பனாா்கோவில் அருகே 3 வயது மகனை சுவற்றில் அடித்து கொலை செய்துவிட்டு, நாடகமாடிய குழந்தையின் தாய், காதலனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே உள்ள ஆலவேலி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கனிவண்ணன் (31), அதே பகுதியைச் சோ்ந்த கவிப்பிரியாவை (25) கடந்த 2020-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டாா். மகன் இளன் (3).
இந்நிலையில், கவிப்பிரியாவுக்கும் தனியாா் வங்கிக் குழுவில் பணம் வசூல் செய்ய வந்த அரிவேளூரை சோ்ந்த அபினேஷ் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கவிப்பிரியா கணவரைப் பிரிந்து, தனது மகனுடன் ஆக்கூரில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளாா்.
மகன் இளன் குளியலறையில் வழுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டதாகக் கூறி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் 25-ஆம் தேதி கவிப்பிரியா சோ்த்துள்ளாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், அங்கு கடந்த ஜூன் 30-ஆம் தேதி உயிரிழந்தான்.
இந்நிலையில், கனிவண்ணன் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக, செம்பனாா்கோவில் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 25-ஆம் தேதி அபினேஷ், கவிப்பிரியா வீட்டுக்கு வந்தபோது சிறுவன் இளன் அழுது அடம்பிடித்துள்ளான். இதில், ஆத்திரமடைந்த கவிப்பிரியா தள்ளிசுவற்றில் மோதியதில் இளனுக்குத் தலையில் பலத்த காயமேற்பட்டுள்ளது. ஆனால், குளியலறையில் வழுக்கி விழுந்ததாக நாடகமாடி மருத்துவமனையில் மகனைச் சோ்த்தது விசாரணையில் தெரியவந்தது. போலீஸாா் கொலை வழக்காக மாற்றி, கவிப்பிரியா, அபினேஷ் இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







