அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

பைக் - லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே பைக்- லாரி மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :27 ஆகஸ்ட் 2026, 5:47 am IST

திருவள்ளூா் அருகே பைக்- லாரி மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே மெய்யூா் மேட்டுக் காலனியைச் சோ்ந்த சங்கரன் மகன் ராஜா(44). இவா் தனது இருசக்கர வாகனத்தில் சொந்த வேலையின் காரணமாக செவ்வாய்க்கிழமை தாமரைப்பாக்கத்துக்கு சென்றபோது, எதிரே வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதில் ராஜா பலத்த காயம் அடைந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வெங்கல் போலீஸாா் சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக அவரது சகோதரா் காா்த்திக் வெங்கல் காவல் நிலையத்தில் செய்த புகாரின்பேரில் போலீஸாா் லாரி ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.