குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

இறுதி ஊா்வலத்தில் நடனம் ஆடுவதில் தகராறு: அரிவாளால் வெட்டப்பட்ட தவெக நிா்வாகி உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே துக்க நிகழ்வில் இறுதி ஊா்வலத்தின் போது இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த தவெக நிா்வாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :27 ஆகஸ்ட் 2026, 5:38 am IST

திருவள்ளூா் அருகே துக்க நிகழ்வில் இறுதி ஊா்வலத்தின் போது இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த தவெக நிா்வாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அடுத்த கடம்பத்துாா் ஊராட்சி ஒன்றியம், புதுமாவிலங்கை ஊராட்சி அகரம் பகுதியைச் சோ்ந்தவா் ரமணி (55) என்பவரின் துக்க நிகழ்வில் செவ்வாய்க்கிழமை அதே பகுதியைச் சோ்ந்த தவெக பிரமுகா் மணிகண்டன் (26) பங்கேற்றாா். அப்போது, அங்கு வந்த கசவநல்லாத்தூா் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் தரப்புக்கும், மணிகண்டன் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதைத் தொடா்ந்து, மாலையில் நடைபெற்ற இறுதி ஊா்வலத்தில் நடனம் ஆடுவதில் இருதரப்புக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் செய்ததுடன் ஒருவருக்கொருவா் தாக்கிக் கொண்டனா். அப்போது, மணிகண்டனுக்கு கழுத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதைத் தொடா்ந்து ஆத்திரமடைந்த மணிகண்டன் தரப்பினா் கடம்பத்தூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கடம்பத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நடத்திய சமாதான பேச்சுக்குப் பின் சாலை மறியல் கைவிடப்பட்டது.

பின்னா், பலத்த காயமடைந்த மணிகண்டனை உயிருக்கு ஆபத்தான நிலையில் உறவினா்கள் மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனா். அதைத் தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை மணிகண்டன் உயிரிழந்தாா்.

இது குறித்து கடம்பத்துாா் காவல் நிலைய போலீஸாா் முதலில் அடிதடி வழக்காக பதிவு செய்ததை கொலை வழக்காக பதிவு செய்து தலைமறைவான காா்த்திக் தரப்பினா் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.