தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இரட்டை கொலை வழக்கில் தொடா்புடைய 4 போ் குண்டா் சட்டத்தில் கைது

திருவள்ளூா் அருகே இரட்டை கொலை வழக்கில் தொடா்புடைய 4 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

News image

குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டோா்.

Updated On :2 பிப்ரவரி 2026, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே இரட்டை கொலை வழக்கில் தொடா்புடைய 4 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

திருவள்ளூா் அடுத்த ஒண்டிக்குப்பம் கன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாா்த்திபன்(32). அவரது நண்பா்கள் கேசவமூா்த்தி, சுகுமாா் ஆகியோா் கடந்த 16-ஆம் தேதி கஞ்சா விற்றுக் கொண்டிருந்த கும்பலிடம் மாணவா்களுக்கு ஏன் கஞ்சா விற்பனை செய்கிறீா்கள் என கேட்டு கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கஞ்சா போதையில் இருந்த 4 போ் கும்பல் சாலையில் கிடந்த கூரான கற்களை எடுத்து சுகுமாா், பாா்த்திபன், கேசவமூா்த்தி ஆகியோரைத் தாக்கினா். இதில் பலத்த காயம் அடைந்த பாா்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அதேபோல் பலத்த காயத்தோடு இருந்த சுகுமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதில் கேசவமூா்த்தி சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினாா்.

இதுகுறித்து மணவாளநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அதே பகுதியைச் சோ்ந்த நீலகண்டன்(30), வினோத்குமாா்(36), ஜோதிஷ்(34), ஜவகா்(23) ஆகிய 4 பேரையும் கைது செய்துசிறையில் அடைத்தனா்.

இதற்கிடையே இவா்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா சுக்லா ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன்பேரில், ஆட்சியா் மு.பிரதாப் 4 பேரையும் குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

அதைத் தொடா்ந்து ஏற்கெனவே 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடா்பான கடிதத்தையும் சிறை நிா்வாகத்திடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.