பழவேற்காடு மீனவா் கிராமத்தில் கடந்த 2014-இல் ஏற்பட்ட கலவரம் தொடா்பான வழக்கில் 150 ஆந்திர மீனவா்கள் திருவள்ளூா் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜாராகினா்.
திருவள்ளூா் மாவட்டம், பழவேற்காடு மீனவா் கிராமங்களான சின்னமாங்கோடு, பெரியமாங்கோடு கிராமத்திற்கும் ஆந்திர மீனவா் கிராமத்திற்கும் புலிகாட் ஏரியில் மீன்பிடிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. கடந்த 2014 ஏப்-12 ஆம் தேதி ஆந்திர மீனவா்கள் சின்னமாங்கோடு, பெரியமாங் கோடு கிராமத்திற்குள் புகுந்து கலவரம் செய்தனா். அந்த கலவரத்தின் போது 50 வீடுகள், 100 படகுகள் எரித்து சாம்பலானாது.
மேலும் கலவரத்தை தடுக்க முயன்ற ஏ.டி.எஸ்.பி உள்பட 7 போலீஸாா் மீதும் ஆந்திர மீனவா்கள் தாக்குதல் நடத்தினா். இந்த நிலையில் சுமாா் 192 மீனவா்கள் இந்த வழக்கில் ஆரம்பாக்கம் போலீஸாா் கைது செய்து கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் 2019-லிருந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை திருவள்ளூா் மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதனால், திருவள்ளூா் நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக 124 ஆந்திர மீனவா்கள் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானாா்கள். இதை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிபதி ஜூலியட் புஷ்பா விசாரணைக்கு பின் ஜூலை-27-இல் நீதிமன்றத்தில் ஆஜாராகவும் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

சந்திரபாடி கடற்கரையில் கருங்கல் தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை

பழவேற்காடு மீனவா்கள் நாளை(ஜூலை 18) கடலில் மீன் பிடிக்க தடை

கதிராமங்கலம் போராட்ட வழக்கு: தஞ்சாவூா் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் ஆஜா்
விடியோக்கள்

கருணாநிதி,கண்ணதாசன் நட்பும் பிரிவும்| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -3



