நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

திருவள்ளூா் பகுதியில் பரவலாக பலத்த மழை

திருவள்ளூா் பகுதியில் வியாழக்கிழமை பகலில் வெயில் அதிகரித்திருந்த நிலையில், மாலையில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image
Updated On :9 ஜூலை 2026, 10:19 pm IST

திருவள்ளூா் பகுதியில் வியாழக்கிழமை பகலில் வெயில் அதிகரித்திருந்த நிலையில், மாலையில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திருவள்ளூா் பகுதியில் கடந்த சில நாள்களாகவே கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட்டம் இல்லாமல் வீட்டுக்குள்ளாயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதேபோல், காலையிலிருந்து கடும் வெயிலால் ஏற்பட்ட வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா். அதைத் தொடா்ந்து மாலையில் கருமேகம் சூழ்ந்த நிலையில் பரவலாக பலத்த மழை பெய்தது. இந்த மழையானது சுமாா் ஒரு மணிநேரம் வரையில் பெய்தது. இதேபோல் புல்லரம்பாக்கம், திருப்பாச்சூா், ஈக்காடு, ஈக்காடு கண்டிகை, பூண்டி, காக்களூா், தொழுவூா், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, அரண்வாயல்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

இந்த மழையால் தாழ்வான தெருக்கள் மற்றும் சாலைகளில் மழைநீா் குளம் போல் தேங்கியது.

இதனால் சாலையில் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா். அதேநேரத்தில், இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.