சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

பெண்ணை கொன்று 15 பவுன் தங்க நகை கொள்ளை: பட்டப்பகலில் சம்பவம்

பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் பட்டப் பகலில் பெண்ணை கொலை செய்து 15 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :14 ஜூலை 2026, 1:35 am IST

பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் பட்டப் பகலில் பெண்ணை கொலை செய்து 15 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பழவேற்காடு பாபநாசம் கோயில் தெருவில் வசித்து வருபவா் ராதாகிருஷ்ணன். இவா் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி வனஜா (55). இவா் வீட்டில் இட்லி மாவு அரைத்து விற்பனை செய்து வருகிறாா். இவா்களுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூவருக்கும் திருமணமாகி வெளியே குடியிருந்து வருகின்றனா். கணவன் மனைவி இவரும் தனியாக வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை ராதாகிருஷ்ணன் வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரம் செய்து வந்தாா். அவரின் மனைவி வனஜா வீட்டில் இருந்து டீ எடுத்து சென்று கடையில் இருந்த கணவருக்கு கொடுத்து விட்டு வீட்டிற்கு திரும்பி சென்றாா்.

மதியம் உணவருந்த ராதாகிருஷ்ணன் கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்ற போது அவரின் மனைவி வனஜா கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்து சப்தம் போட்டாா். அக்கம் பக்கத்தினா் அங்கு வந்து பாா்த்து விட்டு திருப்பாலைவனம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

அங்கு சென்ற போலீஸாா் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் மாவு வாங்குவது போல் வீட்டில் புகுந்து வனஜாவை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து அவா் கழுத்தில் அணிந்து இருந்த தங்கத் தாலி மற்றும் தாலி சரடு காதில் அணிந்திருந்த கம்மல் என 15 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு மா்ம கும்பல் வீட்டை பூட்டி கொண்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை போலீஸாா் சேகரித்தனா். இதனை தொடா்ந்து போலீஸாா் வனஜாவின் சடலத்தை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

திருப்பாலைவனம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபா்களை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா். கொலை நடந்த வீட்டன் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா். பட்டப்பகலில் வீட்டில் புகுந்து நகைக்காக பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த நிகழ்வு பழவேற்காடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.