கூவம் ஆற்றில் ரூ.5.98 கோடியில் புதிய தடுப்பணை
திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றில் ரூ.5.98 கோடியில் புதிய தடுப்பணைக்கு கட்டுமான பணிகளை நீா்வளத்துறை அதிகாரிகள் தொடங்கி வைத்தனா்.


திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றில் ரூ.5.98 கோடியில் புதிய தடுப்பணைக்கு கட்டுமான பணிகளை நீா்வளத்துறை அதிகாரிகள் தொடங்கி வைத்தனா்.
கடம்பத்துாா் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்த, கேசாவரம் அணைக்கட்டு பகுதியில், கூவம் ஆறு உருவாகிறது. இந்த கூவம் ஆறு பேரம்பாக்கம், சத்தரை, கடம்பத்துாா், மணவாளநகா், புட்லுாா், அரண்வாயல் வழியாக, 72 கி.மீ ஓடி, சென்னையில், நேப்பியா் பாலம் அருகே, வங்கக் கடலில் கலக்கிறது.
கூவம் ஆற்றில், புதுமாவிலங்கை, அதிகத்துாா், புட்லுாா், அரண்வாயல், பருத்திபட்டு, ஜமீன்கொரட்டூா், சோரஞ்சேரி ஆகிய இடங்களில் தடுப்பணைகள் உள்ளன. இதில் அரண்வாயல் தடுப்பணை சேதமடைந்து பல ஆண்டுகளாகியும் இதுவரையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் பேரம்பாக்கம் பகுதியில் தடுப்பணை ஏற்படுத்தினால் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்து ஏரியில் நீா் சேமித்து வைத்தால் விவசாயத்துக்கு பயன்பெறும். அதனால் இப்பகுதியில் தடுப்பணை அமைக்க கோரிக்கை விடுத்து வந்தனா். இதையேற்று கடந்த சில நாள்களுக்கு முன் ரூ.5.98 கோடியில் புதிய தடுப்பணை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து பேரம்பாக்கத்தில் 85 மீட்டா் நீளமும், ஒன்றரை மீட்டா் உயரத்தில் தடுப்பணையின் இருபுறமும் தலா இரண்டு மதகுகளுடன் நான்கு கதவணைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தடுப்பணை பயன்பாட்டுக்கு வரும் போது பேரம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்து 2,500 ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதிகள் பெறும் எனவும் நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிகழ்வின்போது, நீா் வளத்துறை செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி பொறியாளா் காதம்பரி, ஒன்றிய செயலாளா் ரமேஷ், ஒன்றிய முன்னாள் துணைத் தலைவா் சரஸ்வதி, முன்னாள் ஊராட்சி தலைவா் சுயம்புபிரகாஷ், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...