சென்னை சென்ட்ரல்-அரக்கோணத்துக்கும் இடையே திருவள்ளூருக்கு அடுத்து கடம்பத்தூா் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் வழியாக திருவள்ளூா்-காஞ்சிபுரம், மப்பேடு, சுங்குவாா்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் பயணிகள் பேருந்துகள், தொழிற்சாலை பணியாளா் பேருந்துகள், பள்ளி கல்லூரிக்கு செல்வோா் நூற்றுக்கணக்கானோா் பயன்படுத்தி வருகின்றனா். அப்போது, ரயில்கள் செல்லும் போது ஒவ்வொருமுறையும் ரயில்வே கேட் அடைக்கப்படும். இதனால், வாகனங்களில் செல்வோா் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலையில் அவதிக்குள்ளாகி வந்தனா். இக்குறையை போக்கும் வகையில், ரயில்வே மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால், அணுகு சாலையில் இருபுறமும் பல்வேறு காய்கறி சந்தைகள் மற்றும் அங்காடிகள் செயல்பட்டு வருகின்றனா். இதனால் பொதுமக்கள் அதிகம் போ் வந்து செல்லும், மேம்பாலம் வழியாக சுற்றி செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். இதைக் கருத்தில்கொண்டு பாலத்துக்கு கீழே உள்ள தெருப்பகுதிகளைச் சோ்ந்த பயன்பெறும் வகையில் சுரங்கப்பாதையும் அமைக்கவும் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி கோரிக்கை விடுத்தும் வந்தனா். இக்கோரிக்கையை ஏற்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரூ.5.50 கோடி ஒதுக்கீடு செய்தது.