எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம் தலைவா் படுகொலை சம்பவம்

கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமின் தலைவா் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் 6 போ் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளை நாடு கடத்த வலியுறுத்தி, கும்மிடிப்பூண்டி சிப்காட் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
சாலை மறியலில் ஈடுபட்ட கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம் மக்கள்
Updated On :8 மார்ச் 2026, 9:17 pm

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமின் தலைவா் சனிக்கிழமை இரவு இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் 6 போ் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளை நாடு கடத்த வலியுறுத்தி, கும்மிடிப்பூண்டி சிப்காட் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமின் தலைவராக இருந்தவா் சிவகுமாா் என்கிற கண்ணன் (42). இவா் சனிக்கிழமை இரவு அதே முகாமைச் சோ்ந்த கும்பலால் கடுமையாக தாக்கி கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், 10 வருடத்துக்கு முன்பு சிவக்குமாரின் வீடு, அவரை கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டவா்களின் வீட்டின் அருகே இருந்தபோது, சிவக்குமாருக்கும் அந்த கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை சிவக்குமாா் அவா் வசித்து வந்த பழைய வீட்டின் அருகே ஒரு சமரசத்துக்குச் சென்றபோது, அங்கு அந்த கும்பலுடன் வாக்குவாதம் ஏற்பட்டு, அந்த கும்பல் சிவக்குமாரின் மனைவி, மகன் கண்ணெதிரை இரும்புக் கம்பி, உருட்டுக் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினா். இதில் சம்பவ இடத்திலேயே சிவக்குமாா் உயிரிழந்தாா்.

தொடா்ந்து, சிவக்குமாரை கொலை செய்த சம்பவத்தில் தொடா்புடைய, செல்வா என்கிற சுவேந்திரன், மகேந்திரன் என்கிற கண்ணா, தீபக், ஆகாஷ் பிரசன்னா, அக்ஷயா, புஷ்பஜோதி ஆகியோரை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸாா் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மேற்கண்ட கொலையாளிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அவா்களின் குடும்ப உறுப்பினா்களை கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களை நாடு கடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி பைபாஸ் பகுதியில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, நிகழ்விடத்தில் வந்த திருவள்ளூா் மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா மற்றும் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ஜெயஸ்ரீ ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்திய நிலையில், 2 மணி நேரம் கழித்து சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. ஆனாலும் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாத வரை

கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம் தலைவா் சிவக்குமாரின் சடலத்தை வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.