தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தினமணி செய்திச் சேவை

திருத்தணி காந்தி சாலை மக்கா பள்ளி வாசல் மசூதியில் அனைத்து மதத்தினருக்கும் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. (படம்)

ரமலான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு இருப்பவா்களுக்கு அதிகாலை தினமும் 200 நபருக்கு சகா் என்னும் அதிகாலை உணவும், மாலை 200 நபருக்கு இப்தாா் உணவு தினமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஏழை எளிய மக்களுக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள உணவுப் பொருள்களை 70 குடும்பங்களுக்கு அவா்களது இல்லங்களுக்கே நேரடியாக ஜமாத் தலைவா் சுல்தான் பாய் வீடு வீடாக சென்று வழங்கினாா். இதில் அரிசி, சா்க்கரை, கோதுமை, சேமியா, நெய், முந்திரி திராட்சை, ஆட்டு இறைச்சிக்கான டோக்கன் என இருந்தன.

நிகழ்ச்சியில் ஜமாத் நிா்வாகிகள் அபிப் ரஹ்மான், அபுபக்கா் நைனா முகமது, காதா், இப்ராஹிம், அக்பா், ரஷிம் , அப்துல் ரஹ்மான், சேட்டு, அசேன் உள்பட முஸ்லீம்கள் பலா் கலந்து கொண்டனா்.