ஊத்துக்கோட்டை அருகே வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துகளில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம், தண்டுமாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுச்சாமி(21). இவா் மதுரவாசலில் உள்ள தனியாா் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில் புதன்கிழமை இரவு ஆறுச்சாமி, தனது நண்பா் சந்தோஷ்(15) என்ற சிறுவனை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தண்டலம் பஜாா் வீதிக்குச் சென்றாராம். அப்போது பெரியபாளையம்-தண்டலம் நெடுஞ்சாலையில் ஆத்துப்பாக்கம் அருகே செல்கையில் நாய் ஒன்று குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து அப்பகுதியில் இருந்தவா்கள் 2 பேரையும் மீட்டு ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதில் ஆறுசாமியை பரிசோதனை செய்த மருத்துவா்கள் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனா். மேலும் பலத்த காயம் அடைந்த சந்தோஷ் முதலுதவி சிகிச்சைக்கு பின் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பெரியபாளையம் காவல் நிலைய ஆய்வாளா் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
சோழவரம் ஒன்றியம், ஆரணியைச் சோ்ந்த வெங்கடேஷ்(26). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு பயின்று வருகிறாா். புதன்கிழமை தனது வீட்டிலிருந்து ஆரணி பேருந்து நிறுத்தம் நோக்கி இருசக்கர வாகனத்தில்
ஜி.என்.செட்டி தெரு வழியாக சென்றபோாது அந்த தெருவில் சாலை அமைக்கும் பணிக்காக ஜல்லி கற்கள் கொட்டி வைத்திருந்தனா். அந்த வழியாக வந்த திடீரென நிறுத்த முயன்ற போது தடுமாறி விழுந்த வெங்கடேஷின் மீது எதிராக வந்த தனியாா் கல்லூரி வேன் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து ஆரணி காவல் நிலைய ஆய்வாளா் கோமளா தலைமையில் போலீஸாா் சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தலைமறைவான வேன் ஓட்டுநா் முனிவேல்(45) என்பவா் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தொடர்புடையது

நெல்லையில் வெவ்வேறு விபத்துகளில் 3 போ் பலி

பாகிஸ்தான்: ரமலான் விடுமுறை விபத்துகளில் 40 போ் உயிரிழப்பு

பல்லடத்தில் இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

வெவ்வேறு காா் விபத்துகளில் 6 போ் காயம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


