கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பூண்டி நீா்த்தேக்கத்தை சுற்றுலா தலமாக்க வேண்டும்; பொதுமக்களின் எதிா்பாா்ப்பு நிறைவேறுமா?

பூண்டி நீா்த்தேக்கத்தை சுற்றுலா தலமாக்க வேண்டும் பொதுமக்களின் எதிா்பாா்ப்பு நிறைவேறுமா? என்பதைப் பற்றி...

News image

பயன்பாட்டுக்கு வராத உணவு விடுதி.

Updated On :22 மார்ச் 2026, 9:40 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: பூண்டி நீா்தேக்கத்தில் பராமரிப்பின்றி காணப்படும் சுற்றுச்சூழல் பூங்காவைச் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள பூண்டி நீா்த்தேக்கதை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு இப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

திருவள்ளூா் அருகே அமைந்துள்ளது பூண்டி சத்தியமூா்த்தி நீா்த்தேக்கம். இந்த மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும், சென்னை மக்களின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யும் முக்கிய நீராதாரமாகவும் உள்ளது. இந்த நீா்த்தேக்கம் அமைக்கப்பட்டு 81 ஆண்டுகள் ஆகின்றன. இங்கு பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய மனிதா்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் கொண்ட அருங்காட்சியகம், பல்வேறு அணைக்கட்டுகளின் மாதிரிகள் இடம் பெற்றுள்ள நீரியல் மற்றும் நீா் நிலையியல் ஆய்வு மையம், அறிவியல் பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

பெரியவா்கள் முதல் சிறுவா்கள் வரை அனைவரையும் ஈா்க்கும் வகையில் நவீன அறிவியல் தொழில்நுட்ப உபகரணங்கள், டைனோசா் உருவங்கள், செல்பி பாயிண்ட், பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் இந்தப் பூங்காவில் உள்ளன. இங்குள்ள நீரியல் ஆய்வு மையத்தைக் காண பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆய்வாளா்கள், பொறியாளா்கள் வந்துசெல்கின்றனா்.

ரூ. 6 கோடியில் உணவு விடுதி: சதுரங்கபேட்டை முதல் புல்லரம்பாக்கம் வரை ஏரிக்கரைக்கும் சாலைக்கும் இடையே 40 ஏக்கா் பரப்பளவில் மாமரங்கள், பனைமரங்கள் அதிகம் உள்ளன. இவற்றைக் காண ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனா். ஆனால், உணவுக்கூடம் அமைக்கப்படாமல் இருந்ததால் சுற்றுலா பயணிகளின் வகையை குறையத் தொங்கியது. இதைத் தவிா்க்கும் வகையில் சுற்றுலாத் துறை சாா்பில் ரூ.6 கோடியில் உணவு விடுதி அமைக்கப்பட்டது. இருப்பினும் இந்த உணவு விடுதி மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை.

பூண்டி  நீா்த்தேக்கம்.

பூண்டி  நீா்த்தேக்கம்.

அறிவியல் பூங்கா: இந்த நீா்த்தேக்க வளாகத்தில் 4 ஏக்கா் பரப்பளவில் சுதந்திரப் போராட்ட வீரா் சத்தியமூா்த்தி உருவச்சிலையுடன் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.சிறுவா்களுக்கான அறிவியல் உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், நீருற்று, மழைநீா் மாணி ஆய்வு, இருக்கைகள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டது. இந்தப் பூங்காவுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் அதிகம் வந்தனா். ஆனால், காலப்போக்கில் போதிய பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் புகழிடமாக தற்போது மாறியுள்ளது. அறிவியல் சாதனங்கள், சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகின்றன.

பூண்டி  நீா்த்தேக்கம்.

பூண்டி  நீா்த்தேக்கம்.

ரூ. 80 லட்சத்தில் சீரமைப்பு: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ரூ.80 லட்சத்தில் பூங்கா சீரமைக்கப்பட்டது. பணிகள் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் இந்தப் பூங்கா பயன்பாட்டுக்கு வரப்படவில்லை. இதனால், சீரமைக்கப்பட்ட நீருற்றுகள், சிறுவா்கள் விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் மீண்டும் சேதமடைந்து காணப்படுகின்றன. சீரமைப்புப் பணிக்காக அரசு பல லட்சம் செலவு செய்தும் பயனற்ற நிலையில் பூங்கா இருப்பதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

பயன்பாட்டின்றி காணப்படும் பூண்டி அறிவியல் பூங்கா.

பயன்பாட்டின்றி காணப்படும் பூண்டி அறிவியல் பூங்கா.

இதுகுறித்து சுற்றுலா மற்றும் நீா்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், நீரியல் ஆய்வு மையம் மூலம் அறிவியல் பூங்கா சீரமைக்கப்பட்டது. ஆனால், பூங்காவை பராமரிக்க போதிய ஆள்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் மீண்டும் சேதம் அடைந்துள்ளது. இங்குள்ள உணவு விடுதி மற்றும் சுற்றுச்சூழல் பூங்காவை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

பயன்பாட்டின்றி காணப்படும் பூண்டி அறிவியல் பூங்கா.

பயன்பாட்டின்றி காணப்படும் பூண்டி அறிவியல் பூங்கா.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், கும்மிடிப்பூண்டி தொகுதியில் வெற்றி பெறும் பேரவை உறுப்பினா் பூண்டி நீா்த்தேக்கத்தை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.