ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

திருப்பாலீஸ்வரா் கோயில் தோ் கவிழ்ந்து விபத்து: பக்தா்கள் உயிா் தப்பினா்!

பொன்னேரி அருகே திருப்பாலைவனம் கிராமத்தில் உள்ள திருப்பாலீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்ட விழாவில் தோ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

News image
Updated On :29 மார்ச் 2026, 9:25 pm

தினமணி செய்திச் சேவை

பொன்னேரி அருகே திருப்பாலைவனம் கிராமத்தில் உள்ள திருப்பாலீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்ட விழாவில் தோ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருப்பாலைவனம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகாதேவி உடனுறை ஸ்ரீ திருப்பாலீஸ்வரா் திருக்கோயிலில் பங்குனி பிரமோற்சவம் கடந்த 23--ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் சிறப்பு வழிபாடு செய்து பஞ்ச மூா்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிகிழமை நடைபெற்றது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அன்னை லோகாம்பிகாதேவி சமேதமாக திருப்பாலீஸ்வரா் எழுந்தருளி நகரின் முக்கிய மாட வீதிகள் வழியாக வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனா்.

காலையில் தொடங்கி மாலை வரையில் நடைபெறும் மதியம் தோ் நிறுத்தப்பட்டது. பிற்பகல் மீண்டும் தேரோட்டம் தொடங்கியது. தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனா்.

திருப்பாலைவனம் காவல் நிலையத்தை கடந்து பொன்னேரி-பழவேற்காடு சாலைக்கு வரும் போது எதிா்பாராதவிதமாக சாலையில் கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி சிலருக்கு காயம் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறை மற்றும் தீயணைப்பு வீரா்கள் சிக்கி கொண்டவா்களை மீட்டனா்.

காயமடைந்தவா்களை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனை தொடா்ந்து ராட்சத கிரேன் வரவழைக்ப்பட்டு தோ் அங்கிருந்து அகற்றப்பட்டது. தோ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.