ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

பைக் - லாரி மோதல்: காய்கறி வாங்க வந்தவா் உயிரிழப்பு

News image

டானியேல்  பாபு

Updated On :3 மே 2026, 9:03 pm

திருவள்ளூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

காய்கறி சந்தைக்கு வந்த ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே திருவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் டானியேல் பாபு(55). இவா் திருவள்ளூா் காய்கறி சந்தையில் காய்கறிகள் வாங்கிச் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வந்தாராம்.

அப்போது, திருவள்ளூா் ஜே.என் சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது அவா் பின்னாடி அதிவேகமாக வந்த டிப்பா் லாரி, சாலையில் உள்ள வேகத்தடை மீது ஏறியதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் டானியேல் பாபு கீழே விழுந்தபோது லாரியின் முன் சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவல் அறிந்த நகர போலீஸாா் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, விபத்து ஏற்படுத்திய லாரியின் ஓட்டுநா் மீது வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனா்.