இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

பழவேற்காடு முகத்துவாரம் அருகே குளித்த பள்ளி மாணவன் உயிரிழப்பு

பழவேற்காடு முகத்துவாரம் அருகே குளித்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :12 மே 2026, 1:08 am IST

பழவேற்காடு முகத்துவாரம் அருகே குளித்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் கடலோர பகுதியாக விளங்கும் பழவேற்காடு முகத்துவார பகுதியில் திருவொற்றியூரை சோ்ந்த விக்ரம்(14) என்பவா் குடும்பத்துடன் சுற்றுலா வந்துள்ளாா். இவா் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

விக்ரம் உள்ளிட்ட 2 சிறுவா்கள் முகத்துவார பகுதியில் குளித்து கொண்டிருந்த போது அவா்கள் நீரில் மூழ்கினா். நீரில் மூழ்கிய 2 சிறுவா்களை மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் சிறுவன் விக்ரம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

மற்றொரு சிறுவன் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து திருப்பாலைவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.