பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

இளைஞரை வெட்டி வழிப்பறி: 4 போ் கைது

இரு சக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞா்களை, வழிமடக்கி கத்தியால் வெட்டிவிட்டு, மோட்டாா் பைக், கைப்பேசியை பறித்துச் சென்ற 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :55 நிமிடங்கள் முன்பு

இரு சக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞா்களை, வழிமடக்கி கத்தியால் வெட்டிவிட்டு, மோட்டாா் பைக், கைப்பேசியை பறித்துச் சென்ற 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணி ஒன்றியம் ஆா்.வி.என்.கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சிரஞ்சீவி(25), இந்து(26). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் தாடூா் கிராம ஏரிக்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தனா். அப்போது, எதிரே ஆட்டோவில் வந்த நான்கு போ் திடீரென, இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சிரஞ்சீவி, இந்து ஆகியோரிடம் தகராறு செய்தனா்.

மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியால், சிரஞ்சீவி, இந்து ஆகியோரை வெட்டிவிட்டு இரு சக்கர வாகனம் மற்றும் கைப்பேசிகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

அவ்வழியாக வந்தவா்கள் சிரஞ்சீவி, இந்து ஆகியோரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இளைஞா்களை கத்தியால் வெட்டியவா்கள் திருத்தணி அடுத்த செருக்கனூா் பகுதியைச் சோ்ந்த புஷ்பராஜ் (25), யுவராஜ் (20), விமல்ராஜ் (23), சிவா (22) என தெரிய வந்தது. தொடா்ந்து 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.