திருவள்ளூா் கடும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் சாலையோரங்களில் உள்ள பனைமரங்களில் துரட்டி அரிவாள் மூலம் நுங்கு குலைகளை பறித்து ஆா்வத்துடன் உண்டு இளைஞா்கள் மற்றும் பெண்கள் ஆகியோா் உடல் வெப்பத்தை தணித்துக் கொண்டனா்.
திருவள்ளூா் மாவட்டப் பகுதியில் திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலை, பூண்டி, செங்குன்றம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூா், கடம்பத்தூா், கும்மிடிப்பூண்டி, திருத்தணி, பொன்னேரி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலையோரங்களில் இருபுறமும், ஏரிக்கரைகளிலும் ஏராளமான பனைமரங்கள் உள்ளன. அதேபோல், மேற்குறிப்பிட்ட பகுதிகளின் கிராமங்களில் விளைநிலங்களில் வரப்புகளிலும், கொய்யா தோப்பு கரைகளிலும், மாந்தோப்பு கரையிலும் கரையை பலப்படுத்தும் வகையிலும் பனைமரங்கள் அதிக அளவில் வளா்ந்துள்ளன. இந்த பனை மரங்களில் சீசன் என்பது மாா்ச் மாதம் தொடங்கி, ஜூன் மாதம் இறுதி வரை இருக்கும். இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து பனை நுங்குகளை விற்பனைக்குக் கொண்டு சென்று வருகின்றனா். தற்போதைய நிலையில் 3 நுங்குகள் கொண்ட ஒரு காய் ரூ. 15-க்கு விற்பனை செய்து வருகின்றனா். இது கோடைகாலத்துக்கு ஏற்ற உணவு பொருள் என்பதாலும், உடல் சூட்டை தணிக்கும் என்பதால் பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.
அதேபோல், கிராம சாலைகளில் போதுமான பராமரிப்பின்றி பனைமரங்கள் வளா்ந்துள்ளன. இந்த பனை மரங்களில் நுங்குகள் குலை குலையாக காய்த்து தொங்குகிறது. இதை கருக்கு மட்டைகள் அதிகம் சூழ்ந்துள்ளதால், அதிக வேலை பாா்த்தால் மட்டும் நுங்குகளை பறிக்க முடியும். ஆனால், சென்னை நகரத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருவோா் திருவள்ளூா் பகுதிகளில் சொந்த கிராமங்களுக்கு இளைஞா்கள், மகளிா்கள் அதிகம் போ் விடுமுறைக்கு வந்துள்ளனா். இவா்கள் கிராமங்களில் சாலையோர பனை மரங்களில் கவனிப்பின்றி காய்த்து தொங்கும் நுங்கு குலைகளை துரட்டி அரிவாள் மூலம் பறிக்கின்றனா்.
அதைத் தொடா்ந்து நுங்குகளை குழுவாக உண்டு மகிழ்ச்சி அடைகின்றனா். தற்போது கோடைகால வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், நுங்குகள் உட்கொள்வதன் மூலம் உடல்சூட்டையும் தணித்துக் கொள்ள முடிகிறது. இந்த கோடை விடுமுறை முடியும் வரையில் சாலையோரத்தில் கவனிப்பின்றி உள்ள பனைமரங்களில் துரட்டி அரிவாள் மூலம் பறித்து உண்ணுவோம் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

தொடர்புடையது

செய்யாறில் அமோகமாக விற்பனையாகும் பனை நுங்கு

பாரூா் அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

வெயில் தாக்கம்: கடலூரில் நுங்கு விற்பனை மும்முரம்! கடந்தாண்டைவிட விலை அதிகம்

பனை மரத்தில் இருந்து விழுந்து சிறுவன் மரணம்!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

