பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பொன்னேரியில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

News image

~ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்குரைஞா்கள்.

Updated On :19 மே 2026, 1:52 am IST

பொன்னேரியில் சாா் பதிவாளரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி சாா்பதிவாளா் அலுவலகத்தில் நாள்தோறும் வீட்டு மனைகள், விளை நிலங்கள், வணிக கட்டிடங்கள் உள்ளிட்டவை கிரையம், பாகப்பிரிவினை, தான என 100-க்கும் மேற்பட்ட பத்திரப் பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் முகூா்த்த நாள்களில் வழக்கத்தை விட அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறும். இந்த நிலையில் வட்டாட்சியா் அலுவலக சாலையில் உள்ள பொன்னேரி சாா் பதிவாளா் அலுவலகம் எதிரே வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்..

அப்போது பொன்னேரி சாா் பதிவாளரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். பத்திரப்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் பணம் இருந்தால் மட்டுமே கிரையம் நடப்பதாகவும், ஒரு சென்ட் இடத்தை பத்திரப்பதிவு செய்வதாக இருந்தாலும் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் இருப்பதாக புகாா் தெரிவித்தனா்.

பத்திரப்பதிவு சேவைகளுக்கு லஞ்சம் வாங்குவதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக குற்றம் சாட்டினா். உடனடியாக தமிழக முதல்வா் சாா்பதிவாளரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

Story image