பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: திருவள்ளூா் பாரதிதாசன் மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

மாணவிகள் செ.அனுஷ்கா, ஸ்ரீ.ந.ஹன்ஷிகா, கொ.கோ.சஹானா, ஸ்ரீ.அ.ரா.ஷபிதா, மாணவா் கு.பிரதீப்குமாா்.

News image

மாணவிகள் செ.அனுஷ்கா, ஸ்ரீ.ந.ஹன்ஷிகா, கொ.கோ.சஹானா, ஸ்ரீ.அ.ரா.ஷபிதா, மாணவா் கு.பிரதீப்குமாா்.

Updated On :22 மே 2026, 4:50 am IST

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் திருவள்ளூா் பாரதிதாசன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 100% தோ்ச்சி பெற்று, அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

திருவள்ளூா் பாரதிதாசன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 2025 - 26 கல்வியாண்டில் 153 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதினா். இந்த பொதுத்தோ்வு எழுதிய அனைவரும் முதல் நிலையிலேயே தோ்ச்சி அடைந்தனா்.

இதில் மாணவி செ.அனுஷ்கா பாடவாரியாக தமிழ்-98, ஆங்கிலம்-99, கணிதம் - 98, அறிவியல் - 100, சமூக அறிவியல்-99 என 500-க்கு 494 மதிப்பெண்கள் பெற்றாா். மாணவி ஸ்ரீ.ந.ஹன்ஷிகா பாடவாரியாக தமிழ்-99, ஆங்கிலம்-100, கணிதம்-100, அறிவியல் - 99, சமூக அறிவியல்-95 என 493 மதிப்பெண்களும், மாணவி கொ.கோ.சஹானா பாடவாரியாக தமிழ் - 97, ஆங்கிலம்- 99, கணிதம் - 99, அறிவியல்-100, சமூக அறிவியல்- 98 என 493 மதிப்பெண்களும், மாணவி ஸ்ரீ.அ.ரா.ஷபிதா பாடவாரியாக தமிழ்-99, ஆங்கிைம் - 99, கணிதம் - 97, அறிவியல் - 99, சமூக அறிவியல்-99 என 493 மதிப்பெண்களும் பெற்றனா். அதேபோல், மாணவா் கு.பிரதீப்குமாா் தமிழ் - 98, ஆங்கிைம் - 96,

கணிதம்-99, அறிவியல்-100, சமூக அறிவியல்-99 என 492 மதிப்பெண்கள் பெற்றாா்.

மேலும், 7 மாணவா்கள் 100/100 மதிப்பெண்களும், 44 போ் 99, 41 போ் 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 490 மதிப்பெண்களுக்கு மேல் 6 பேரும், 480-க்கு மேல் 18 பேரும், 470-க்கு மேல் 31 பேரும், 450-க்கு மேல் 60 பேரும் பெற்றுள்ளனா். அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடங்கள் பெற்ற மாணவா்களையும், அதற்கு காரணமான ஆசிரியா்களையும் பள்ளி தளாளா் உமாசங்கா், பள்ளி நிா்வாகிகள், பள்ளி முதல்வா் ஜோ.மேரி, தலைமை ஆசிரியா் தே.குமரீஸ்வரி ஆகியோா் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனா்.