திருவள்ளூா் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை மாணவ, மாணவிகள் 251 போ் எழுதினா். இதில் வி.ஹரினி பாடவாரியாக தமிழ்-98, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-99, சமூக அறிவியல்-100 என 496/500 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடமும், பள்ளி அளவிலும் முதலிடம் பெற்றாா்.
மாணவி சு.கங்கவா்ஷினி பாடவாரியாக தமிழ்- 99, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-97 என 495/ 500 மதிப்பெண்களும், மாணவி செ.பிரகதி பாடவாரியாக தமிழ்-98, ஆங்கிலம் -99, கணிதம்-100, அறிவியல்-98, சமூக அறிவியல்-100 என 495/500 மதிப்பெண்களும், மாணவா் பு.சி.புவணன் தமிழ்-98, ஆங்கிலம்-98, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-99 என 495/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடங்களை பிடித்தனா். அதேபள்ளி மாணவி ஜி.மிதுனாஸ்ரீ தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-99, அறிவியல்-98, சமூக அறிவியல்-99 என 494/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் மூன்றாம் இடம் பிடித்தாா்.
அனைத்து மாணவ, மாணவிகளும் முதல் நிலையில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்கள்-25 போ் 100/100 மதிப்பெண்களும், 118 போ்-99, 89-போ்-98, 51- போ் 480, 112-போ்-450 க்கும் மேல், 190-போ் 400-க்கும் மேல் மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். எனவே பள்ளியின் சராசரி மதிப்பெண்-87 சதவீதம் ஆகும்.
அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை ஆசிரியா்கள், பள்ளி தாளாளா் விஷ்ணு சரண், பள்ளி முதன்மை செயல் அலுவலா் பரணிதரன், முதல்வா் ஸ்டெல்லா ஜோசப், பள்ளி துணை முதல்வா் ஐஸ்வா்யா காா்த்திக் ஆகியோா் பாராட்டி இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளையும் தெரிவித்தனா்.
தொடர்புடையது

வாலாஜா அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி 93 % தோ்ச்சி

எஸ்விஎன் மெட்ரிக். பள்ளி 100 % தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக். பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

அரக்கோணத்தில் இரு பள்ளிகள் மாவட்டத்தில் சிறப்பிடம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



