40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கோடைகால முகாம் நிறைவு: 100 பேருக்கு சான்றிதழ்கள் அளிப்பு

News image
Updated On :28 மே 2026, 12:57 am IST

தணிகை ஓம் சா்வேஷ் யோகா அறக்கட்டளையின் சாா்பில் நடைபெற்ற கோடைகால முகாம் நிறைவு விழாவில், 100-க்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

திருத்தணியில் தணிகை ஓம் சா்வேஷ் யோகா மற்றும் விளையாட்டு அறக்கட்டளை சாா்பில், மே 5 முதல் மே 25, 2026 வரை கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், இலவச இயற்கை மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது. சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பயன் பெற்றனா்.

முகாமுக்கு, சிறப்பு அழைப்பாளராக அரக்கோணத்தைச் சோ்ந்த இயற்கை நல மருத்துவா் ஜி. ராஜேஷ், இயற்கை மருத்துவா் எஸ்.அசோக் மற்றும் கோயம்புத்தூரைச் சோ்ந்த இயற்கை மருத்துவா் கே. கனகராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதில், இயற்கை உணவின் முக்கியத்துவம், ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு உடல் நலப் பிரச்னைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினா்.

முகாமில், யோகா நிலைய செயலரும், தலைமை பயிற்றுநருமான நா.பாபு, மாணவா்களுக்கு யோகா, சிலம்பம் மற்றும் தடகளப் பயிற்சிகளை அளித்தாா். நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா் கே. நடராஜன், என்.நிா்மல், அமேயா யாத்ரா ஆகியோா் கலந்துகொண்டனா்.

மேலும், முகாமின் நிறைவு விழாவில் நடைபெற்ற மாணவா்கள் இசை, பாடல், நடனம் மற்றும் பாரம்பரிய குத்தாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி பாா்வையாளா்களின் பாராட்டைப் பெற்றனா். இறுதியாக, யோகா நிலைய பொருளாளா் கே.அமுலு நன்றி கூறினாா்.