சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.51 கோடி

News image

திருத்தணி முருகன் கோயில்

Updated On :28 மே 2026, 12:58 am IST

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 28 நாள்களில் ரூ.1, 51,55, 223 கோடி ரொக்கம் மற்றும் 353 கிராம் தங்கம், 6,623 கிராம் வெள்ளியை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் ஒன்றான இங்கு ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து வழிபட்டு செல்கின்றனா். தில் பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில் பணம், நகை, வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனா்.

இந்நிலையில் பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய ரொக்கம் எண்ணும் பணி புதன்கிழமை தேவா் மண்டபத்தில் கோயில் ஆணையா் க. ரமணி முன்னிலையில் நடைபெற்றது.

இதில் திருக்கோயில் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள், ஓய்வு பெற்ற அலுவலா்கள் என 200 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு உண்டியல் காணிக்கை எண்ணினா்.

கடந் 28 நாள்களில் 1 கோடியே 51 லட்சத்து 55 ஆயிரத்து 223 ரூபாய் ரொக்கம் மற்றும் 353 கிராம் தங்கம், 6,623 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.