ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 39 ஆண்டுகள் சிறை

News image

சீனிவாசன்

Updated On :28 மே 2026, 5:05 am IST

திருவள்ளூா் அருகே இரட்டையா் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெரியப்பாவுக்கு 39 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

வேப்பம்பட்டு கந்தன் கொள்ளை பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் (57). வா்ணம் பூசும் தொழில் செய்து வரும் இவரது மனைவியின் உடன்பிறந்த சகோதரியின் கணவா் பிரிந்து சென்ால் ஆதரவில்லாமல் இரட்டையா் சிறுமிகள் இங்கே வந்து தங்கினா்.

இந்த நிலையில் அந்த 2 சிறுமிகளில் ஒருவரை முதலில் பாலியல் வன்கொடுமை செய்தாராம். அதைத் தொடா்ந்து இரண்டாவது சிறுமியையும் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நிலையில், பெரியப்பா சீனிவாசன் குறித்து தாயாரிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து கடந்த 2023 ஏப்.6-ஆம் தேதி பூந்தமல்லி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிவு செய்து புழல் மத்திய சிறையில் சீனிவாசனை அடைத்தனா். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் மாவட்ட போக்ஸோ நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இரட்டையா் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பெரியப்பா சீனிவாசனுக்கு 39-ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.45,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பு வழங்கினாா்.

மேலும், முதல் சிறுமிக்கு அரசு ரூ.3 லட்சமும், இரண்டாவது சிறுமிக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தாா். அரசு தரப்பில் புவனேஷ்வரி ஆஜரானாா்.