பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை

கும்மிடிப்பூண்டி அருகே சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15,000 அபராதம் விதித்தும் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

News image

ஜெகன்நாதன்

Updated On :27 மே 2026, 12:34 am IST

கும்மிடிப்பூண்டி அருகே சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15,000 அபராதம் விதித்தும் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூா் அருகே உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த தசரதன் மகன் ஜெகன்நாதன் (35). இவா் கடந்த 2023 மே மாதம் 7-ஆம் தேதி ஒரு வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியிடம் அத்துமீறி நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தாராம். இதுதொடா்பாக அவரது தந்தை கும்மிடிப்பூணடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போக்ஸோவில் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜாா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில் திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. செவ்வாய்க்கிழமை இறுதியாக மாவட்ட போக்ஸோ நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஜெகன்நாதனுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.

மேலும் சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா். இதையடுத்து கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஜெகன்நாதனை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று புழல் சிறைச்சாலையில் அடைத்தனா். அரசுத்தரப்பில் புவனேஸ்வரி ஆஜரானாா்.