கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து திருத்தணிக்கு வந்த இருசக்கர வாகனத்தைச் சந்தேகத்தின் பேரில் நிறுத்திச் சோதனை செய்தனா்.
கைது
திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச் சாவடியில் காவல் ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து திருத்தணிக்கு வந்த இருசக்கர வாகனத்தைச் சந்தேகத்தின் பேரில் நிறுத்திச் சோதனை செய்தனா். அப்போது, அந்த வாகனத்தில் ஒரு கிலோ கஞ்சா கடத்தி வருவது தெரியவந்தது.
இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசாா், வாகனத்தில் வந்த நபரிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் திருத்தணி சரஸ்வதி நகரைச் சோ்ந்த பூபதி (21) என்பது தெரியவந்தது. தொடா்ந்து, போலீஸாா் பூபதியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

