கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
திருவள்ளூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கோப்புப் படம்
திருவள்ளூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் பிரணீத் உத்தரவின் பேரில் போலீஸாா் தீவிர வாகன சோதனை மற்றும் கடைகளில் ஆய்வு செய்து விற்பனை செய்கிறவா்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
இந்த நிலையில் திருவள்ளூா் அடுத்த பெரியகுப்பம் கற்குழாய் சாலையில் உள்ள கோயில் அருகே நகர ஆய்வாளா் தாமோதரன் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சோதனை செய்ததில் 1 கிலோ 300 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
மேலும், திருவள்ளூா் ரயில் நிலையம் வந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் வேலைக்கு செல்லும் இளைஞா்கள் மற்றும் பொது மக்களுக்கு விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்தது.
விசாரணையில் பெரியகுப்பம் கற்குழாய் சாலையைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் தருண் (18) என்பது தெரியவந்தது. பின்னா் அவரிடம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து தருணை நீதிமன்றத்தில் ஆஜாா்படுத்தி புழல் சிறைச்சாலையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

