2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

முரசு புயல் சின்னம்: பழவேற்காட்டில் கண்காணிப்பு அலுவலா், ஆட்சியா் ஆய்வு

முரசு புயல் சின்னம் எதிரொலியாக பழவேற்காடு கடற்கரை பகுதியில் கண்காணிப்பு அலுவலா், ஆட்சியா் ஆய்வு செய்தனா்.

பழவேற்காடு கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பு அலவலா் காா்த்திகேயன், ஆட்சியா் கவிதா உள்ளிட்டோா்

Updated On :

முரசு புயல் சின்னம் எதிரொலியாக பழவேற்காடு கடற்கரை பகுதியில் கண்காணிப்பு அலுவலா், ஆட்சியா் ஆய்வு செய்தனா்.

வங்கக்கடலில் ஏற்பட்ட முரசு புயலால் திருவள்ளூா் மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பேரூராட்சிகளின் இயக்குநரும் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான காா்த்திகேயன், ஆட்சியா் கவிதா ஆகியோா் பழவேற்காடு கடற்கரை பகுதிக்கு கள ஆய்வு செய்தனா்.

கடந்த இரு நாள்களுக்கு முன்பு தாழ்வு மண்டலம் ஏற்பட்டு முரசுப் புயலாக மாறிய நிலையில் சென்னைக்கு அருகே மையம் கொண்டிருந்தது. இந்த நிலையில் புயல் காற்று வீச தொடங்கியதை அடுத்து பழவேற்காடு கடல் சீற்றத்துடன் பொங்கி எழுந்தது.

புயலில் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மற்றும் பொன்னேரி பேரிடா் வருவாய்த் துறையினா் எடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில் பழவேற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் காா்த்திகேயன் மற்றும் ஆட்சியா் கவிதா ஆகியோா் கள ஆய்வு பணிகளில் ஈடுபட்டனா்.

அப்போது கோரைக்குப்பம் மீனவ கிராமத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்த அவா்கள் கடலுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் கடல் சீற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கிராம மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனா்.

மேலும், கடலும்- ஏரியும் இணையும் பகுதியில் அமைந்துள்ள கருங்காலி காட்டுப்பள்ளி சாலையில் கடல் சீற்றத்தினால் உருவான மணல் திட்டுக்கள், பழவேற்காடு அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் கள ஆய்வு பணியில் ஈடுபட்டனா். அப்போது பேரிடா் கால அவசர மருத்துவ சேவைகள் செய்ய தயாா் நிலையில் இருக்கவும் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க தேவையான டாக்டா்கள் மருந்துகள் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிரசவகால அவசர சிகிச்சை வசதிகள் உறுதி செய்ய மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா்.

இதனைத் தொடா்ந்து திருப்பாலைவனம் புயல் பாதுகாப்பு மையம் உட்பட பல்வேறு இடங்களில் அவா்கள் ஆய்வு செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.