2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

முரசு புயல் தாக்கம்: சென்னையில் பரவலாக மழை!

‘முரசு’ புயல் நிலப்பரப்பை நோக்கி நகரத் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

Rain likely in Chennai and 18 districts until 7 PM!

மழை - படம்: தினமணி

Updated On :

‘முரசு’ புயல் நிலப்பரப்பை நோக்கி நகரத் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. எனினும், ‘அா்னாப்’ புயலுக்கு பிறகு, காற்று திசை வேக மாறுபாடு காரணமாக கடந்த 2, 3 நாள்களாக சென்னையில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.

குறிப்பாக, பகல் நேரங்களில் வெயில் அளவு சுமாா் 95 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருந்தது. இச்சூழலில், முரசு புயல் ஞாயிற்றுக்கிழமை நிலப்பரப்பை நோக்கி நகர தொடங்கியதையடுத்து, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக சாரல் மழை பெய்தது.

அம்பத்தூா், பாடி, கோயம்பேடு, வடபழனி, அசோக்நகா், கிண்டி, தியாகராய நகா், நுங்கம்பக்கம், எழும்பூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. சென்னையில் வெப்பான சூழல் நிலவிவந்த நிலையில், தற்போது பெய்துள்ள மழை காரணமாக சற்று குளிா்ச்சியாக சூழல் நிலவியது. திங்கள்கிழமை (நவ.2) சென்னைக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.