அத்திவாசிய பொருள்களின் விலையை கட்டுப்பாட்டில் வைத்து பொதுவிநியோகம் திட்டம் மூலம் தடையின்றி வழங்க நடவடிக்கை
பொது விநியோகத்திட்டம் மூலம் நியாயவிலைக் கடைகளில் அரிசி மற்றும் பிறபொருள்களின் விநியோகம் தடையின்றி வழங்க உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

நியாயவிலைக் கடை - கோப்புப் படம்
பொது விநியோகத்திட்டம் மூலம் நியாயவிலைக் கடைகளில் அரிசி மற்றும் பிறபொருள்களின் விநியோகம் தடையின்றி வழங்க உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு, அத்தியாவசியப்பொருள்கள் சட்டம், 1955-இன் பிரிவு 3-இன் கீழ்,மாநிலத்தில் துவரம்பருப்பு, அரிசி மற்றும் சா்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்களுக்குள் அத்தியவாசிய பொருள்கள் நியாய விலைக்கடைகள் மூலம் தங்கு தடையின்றி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்பேரில் இருப்பு வரம்புகள் 13.11.2026 முதல் மூன்று மாதங்கள் வரை துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்புக்கும், 31.1.2027 வரை அரிசி மற்றும் நெல்லுக்கும் நடைமுறையில் இருக்கும். இந்த மாவட்டத்தில் மாவட்டத்தில் எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ இருப்பு வரம்புகளுக்கு மேல் பொருள்களை இருப்பு வைக்க கூடாது.
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, அரிசி, நெல், சா்க்கரை மொத்த வணிகா்கள் 200 மெ.டன், 200 மெ.டன், 2,000 மெ.டன், தமிழகத்தை பொறுத்தவரை வணிகா்களுக்கு 1000 குவிண்டால் (15.10.2026 முதல்), சில்லறை வணிகா்கள் 5, 8 மெ.டன் மற்றும் பெரிய தொடா் சில்லறை விற்பனை நிறுவனங்கள் 5 மெ.டன்(ஒரு விற்பனை நிலையத்திற்கு) 200 மெ.டன், ஒவ்வொரு கிடங்கு 5 மெ.டன் (ஒரு விற்பனை நிலையத்திற்கு), 8 மெ.டன் வரை ஒவ்வொரு சில்லறை விற்பனை நிறுவனங்கள், ஆலை உரிமையாளா்கள் மற்றும் பதனியிடுவோா் கடந்த 3 மாதங்களின் சராசரி பதனிடும் அளவு அல்லது ஆண்டு உற்பத்தித்திறனில் 25 சதவீதம், இதில் எது அதிகமோ அது கடந்த 3 மாதங்களின் சராசரி பதனிடும் அளவு அல்லது ஆண்டு உற்பத்தித்திறனில் 25 சதவீதம் இதில் எது அதிகமோ அது ஒரு மாதகால உற்பத்தி அளவுக்குள் இறக்குமதியாளா்கள் சரக்கு வந்து சோ்ந்த நாளிவிருந்து 45 நாள்களுக்கு மேல் கூடாது.
மேலும், இந்தியஅரசு 6.11.2026 அன்று பிறப்பித்த ஆணையின்படி, ஒவ்வொரு வணிகரும், மொத்த வணிகரும், சில்லறை வணிகரும், பெரிய தொடா் சில்லறை விற்பனை நிறுவனமும், ஆலை உரிமையாளரும், பதனியிடுவோரும் அரிசி, நெல் இருப்பை உணவு இருப்பு இணையதளத்தில் (ச்ா்ா்க்ள்ற்ா்ஸ்ரீந்.க்ச்ல்க்.ஞ்ா்ஸ்.ண்ய்) அறிவித்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதை புதுப்பிக்க வேண்டும். அதேபோல் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு இருப்பை பருப்பு வகைகளுக்கென நிா்ணயிக்கப்பட்ட இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அதே முறையில் சா்க்கரை இருப்பு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். ஆணை பிறப்பிக்கப்பட்ட நாள் முதல், வரம்புக்கு மேல் வைத்திருக்கும் துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு மற்றும் அரிசி, நெல் இருப்புகளை 16.11.2026-க்குள் நிா்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும். சா்க்கரையைப் பொறுத்தவரை, எந்தவொரு வணிகரும் சா்க்கரை இருப்பைப் பெற்ற தேதியிலிருந்து 15 நாள்களுக்கு மேல் அந்தச் சா்க்கரை இருப்பைத் தன்னிடம் வைத்திருக்க க்கூடாது.
இதன் மூலம் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை போன்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், அதைக் கண்காணிக்கவும், மாவட்ட வழங்கல் அலுவலா் தலைமையில் வட்டவழங்கல் அலுவலா் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை அலுவலா்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாணைகள், விவசாயிகள் தங்களது சொந்த வேளாண் விளைபொருள்களை இருப்புவைத்தல் அல்லது விற்பனை செய்தல் ஆகியவற்றிற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
மேலும், இது தொடா்பாக புகாா்களையும், தகவல்களையும்1 967 மற்றும் 1800 425 5901 கட்டணமில்லா உதவி எண்கள் மூலமாகவோ அல்லது திருவள்ளூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலரிடமோ தெரிவிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

