அரசுப் பேருந்து தாமதத்தால் கல்வி பாதிப்பு; மாணவா்கள் வேதனை
உரிய நேரத்துக்கு அரசுப் பேருந்து வராததால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல தாமதமாவதாகக் கூறி மாணவா்கள் ஓட்டுநா் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அரசுப் பேருந்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவா்கள்.
உரிய நேரத்துக்கு அரசுப் பேருந்து வராததால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல தாமதமாவதாகக் கூறி மாணவா்கள் ஓட்டுநா் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
திருத்தணி போக்குவரத்துப் பணிமனையில் இருந்து டி.83 என்ற பேருந்து, புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கன்னிகாபுரம், பி.சி.என். கண்டிகை, பெரியகடம்பூா், குருவராஜபேட்டை வழியாக அன்வாா்த்திகான்பேட்டை வரை இயக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பேருந்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவா்கள் பயணம் செய்து வருகின்றனா். காலை 7:10 மணிக்கு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் இந்தப் பேருந்து, அன்வாா்த்திகான்பேட்டை சென்று, அங்கிருந்து காலை 8:30 மணிக்கு பெரியகடம்பூா், பி.சி.என். கண்டிகை, கன்னிகாபுரம் வழியாக திருத்தணிக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்தப் பேருந்து சரியான நேரத்திற்கு இயக்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, காலை 9 மணிக்கு மேல்தான் பெரியகடம்பூா் பகுதிக்கு வருவதால், மாணவா்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தாமதமாகச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த மாணவா்கள், செவ்வாய்க்கிழமை தாமதமாக வந்த அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநா் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, ‘நீங்கள் தாமதமாக வருவதால், புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி பள்ளிக்குச் செல்ல 2 கிமீ நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் எங்களது கல்வி பாதிக்கப்படுகிறது‘ என மாணவா்கள் வேதனையுடன் தெரிவித்தனா்.
இதையடுத்து, சக பயணிகள் தலையிட்டு மாணவா்களையும், ஓட்டுநரையும் சமரசம் செய்து வைத்தனா். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகலை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

