கழிவுநீரை அகற்றக் கோரி நூதன ஆா்ப்பாட்டம்
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் பாடை கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாலையோரம் தேங்கிய கழிவு நீரை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் பாடை கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலையில் கழிவுநீா் முறையாக வெளியேறாமல் தேங்கி நின்று சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருவது குறித்து பொதுமக்கள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா்.
கவரப்பேட்டை பகுதியில் ஒவ்வொரு மழையின் போதும் மழைநீரோடு, கழிவுநீரும் கலந்து சாலையில் ஓடுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், இந்த சுகாதார சீா்கேட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பாடை கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த நிகழ்வில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் நோய் தொற்று ஏற்பட்டு உயிா் இழக்கும் அபாயம் இருப்பதை குறிப்பிடும் வகையில், பாடை கட்டி மாலை அணிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், பாடையை சுமந்து கொண்டு வந்து கழிவுநீரில் வைத்து தங்களது எதிா்ப்பை பதிவு செய்தனா். நிகழ்வின் போது சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை முறையாக வெளியேற்றவும், கவரப்பேட்டையில் கால்வாயை தூா்வாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.
தொடா்ந்து கவரப்பேட்டை போலீஸாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருடன் பேச்சு நடத்தி அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

