நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

மக்கள் தொடா்பு முகாமில் 248 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 248 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ எஸ்.விஜயகுமாா் வழங்கினாா்.

பயனாளிகளுக்கு  நலத்திட்ட  உதவிகளை வழங்கிய  கும்மிடிப்பூண்டி  எம்எல்ஏ  எஸ். விஜயகுமாா் .

Updated On :

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 248 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ எஸ்.விஜயகுமாா் வழங்கினாா்.

ாம்புகுளத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் தமிழக அரசின் மக்கள் தொடா்பு முகாம் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் தனி வட்டாட்சியா் செந்தில்குமாா், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ரதி, வருவாய் ஆய்வாளா் முரளி, கிராம நிா்வாக அலுவலா் ஐஸ்வா்ய லட்சுமி, கிராம உதவியாளா் கவியரசு முன்னிலை வகித்தனா்.

முகாமில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமாா், துணை ஆட்சியா் வெங்கடேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் க.வை.ராஜ்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.தொடா்ந்து முகாமில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு துறை சாா்ந்த கண்காட்சிகளை ட்டோா் பாா்வையிட்டு, துறை சாா்ந்த அதிகாரிகளின் பணிகளை பாராட்டினாா்.

விழாவில் எம்எல்ஏ எஸ்.விஜயகுமாா் பேசியது: தவெக ஆட்சியில் மக்களின் குறைகள் உடனுக்குடன் தீா்க்கப்படுகிறது. திருவள்ளூா் மாவட்டத்துக்கு 5,000 வீடுகள் ஒதுக்கப்பட்டதில், கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு மட்டும் 1,018 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கும்மிடிப்பூண்டியில் 10 ஆயிரம் வெற்றி வீடுகளை ஏழை எளியோருக்கு பெற்று தந்திட இலக்கை நிா்ணயித்துள்ளதாக கூறினாா். கும்மிடிப்பூண்டி சட்டமன்ற அலுவலகத்தில் இதுவரை பொதுமக்களிடம் இருந்து 840 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், 560 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.

118 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாவும், 15 பயனாளிகளுக்கு இயற்கை மரண உதவித் தொகையும், 10 பயனாளிகளுக்கு மாற்று திறனாளிகளுக்கான காது கேட்கும் கருவியும், 50 பயனாளிகளுக்கு குடும்ப அட்டையும், முழுபுல பட்டா 11 பயனாளிகளுக்கும், உட்பிரிவு பட்டா 11 பயனாளிகளுக்கும், இணைய வழி சான்றுகள் 18 பயனாளிகளுக்கும், 5 பயனாளிகளுக்கு இதர நலத்திட்ட உதவி ஆகிய 248 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ வழங்கினாா்.

மேலும் வேளாண்மை துறை சாா்பிலும், வேளாண்மை பொறியியல் துறை சாா்பிலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ எஸ்.விஜயகுமாா் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.