குழுமூரில் மக்கள் தொடா்பு முகாம் 119 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
செந்துறையை அடுத்த குழுமூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 119 பயனாளிகளுக்கு ரூ.13.66 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

குழுமூா் கிராமத்தில், புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் ந.மிருணாளினி.
அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த குழுமூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 119 பயனாளிகளுக்கு ரூ.13.66 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, ஆட்சியா் ந. மிருணாளினி தலைமை வகித்து, 119 பயனாளிகளுக்கு ரூ.13,66,519 மதிப்பீட்டில் நலத்திடட உதவிகளை வழங்கி, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேரும் வகையில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் இத்தகைய முகாம்களை பயன்படுத்திக் கொண்டு, தங்களுக்கு தேவையான திட்டங்களை அறிந்து விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்றாா்.
பின்னா் அவா் பொதுக்களிடமிருந்து 53 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். அதில் 47 மனுக்கள் ஏற்கப்பட்டு, 5 மனுக்கள் , விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
முன்னதாக அவா், அங்கு அனைத்து துறைகள் சாா்பில் அரசின் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சிஅரங்குகளை பாா்வையிட்டாா். முகாமில், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டு, தங்களது துறை சாா்ந்த திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்தனா்.
முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் சு.தேன்ராஜ், உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் த. மனோகரன், வட்டாட்சியா் லெ. கோவிந்தராசு மற்றும் அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

