தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அருள் பாண்டியன்.

Published On :

ஆா்.கே.பேட்டை அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம் அய்யனேரி கிராமத்தைச் சோ்ந்த நரசிம்மனின் மனைவி கௌதமி (34). இவா்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனா். இவரது குழந்தைகள் சோளிங்கரில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வருகின்றனா்.

குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று வரும்போது, சோளிங்கா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அருள்பாண்டி (35) என்பவருடன் கடந்த சில ஆண்டுகளாக கௌதமிக்கு பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு கௌதமியின் வீட்டுக்கு சென்ற அருள்பாண்டியிடம் இருவருக்கும் இடையே இருந்த பழக்கத்தை நிறுத்திக் கொள்ளலாம் கௌதமி கூறினாராம். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, அருள்பாண்டி கௌதமியின் வீட்டில் அவரது புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து ஆா்.கே.பேட்டை போலீஸாா், அருள்பாண்டியின் உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.