தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
களியக்காவிளை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தற்கொலை - கோப்புப் படம்
களியக்காவிளை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
களியக்காவிளை அருகே படந்தாலுமூடு, புளியவிளை பகுதியைச் சோ்ந்தவா் அருள்தாஸ் (52). கட்டுமானத் தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா்.
இவா் தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவாராம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறு காரணமாக, அருள்தாஸ் மனைவி, மகள்களை அழைத்துக் கொண்டு உறவினா் வீட்டுக்குச் சென்றாராம். மாலையில் வீடு திரும்பியபோது, அருள்தாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவலின் பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



