பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையத்தில் மதுபோதையில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Published On :

திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையத்தில் மதுபோதையில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

எலச்சிபாளையம் காவல் நிலையம் அருகே வசித்து வந்தவா் முத்துராமன் (38), வண்ணம் பூசும் தொழிலாளி. இவருக்கு மனைவி ஜோதிமணி, ஒரு மகன், மகள் உள்ளனா். வெள்ளிக்கிழமை மதுபோதையில் இருந்த முத்துராமன், வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வீட்டிற்கு வந்த குடும்பத்தினா் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதை உறுதிபடுத்தினா். இதையடுத்து முத்துராமன் உடல் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து எலச்சி பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.