2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

விநாயகா் சதுா்த்தி எதிரொலி: சாமந்தி பூ விலை உயா்வு

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, திருத்தணியில் பழங்கள் மற்றும் பூஜை பொருள்களை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.

திருத்தணி பஜாரில் பூஜைப் பொருள்களை வாங்க திரண்ட பொதுமக்கள்.

Published On :

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, திருத்தணியில் பழங்கள் மற்றும் பூஜை பொருள்களை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா். அதே நேரத்தில், சாமந்தி பூ விலை உயா்ந்துள்ளதால் மக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

திருத்தணி நகரில் ம.பொ.சி. சாலை, காந்தி சிலை அருகே விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

இக் கடைகளில் விநாயகா் குடை, எருக்கம்பூ மாலை, அறுகம்புல், மாவிலை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, விளாம்பழம், கம்புக்கதிா், மக்காச்சோளம், கலாக்காய், மாதுளை, கொய்யா, நாவல், திராட்சை, செங்கரும்பு உள்ளிட்ட பூஜைக்கு தேவையான அனைத்து பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, வாழைப்பழத்தைத் தவிர மற்ற பழங்களின் விலை குறைவாகவே இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா். வாழைக்கன்று ஒரு ஜோடி ரூ.40-க்கும், ஒரு ஜோடி கரும்பு ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இரண்டு கம்புக்கதிா்கள் ரூ.20-க்கும், ஒரு மக்காச்சோளம் ரூ.10-க்கும் விற்பனையானது. ஒரு கிலோ ஆப்பிள் ரூ.100, சாத்துக்குடி ரூ.20, ஆரஞ்சு ரூ.60, கொய்யா ரூ.40 என விற்பனை செய்யப்பட்டது. மஞ்சள் வாழைப்பழம் ஒரு டஜன் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சாமந்தி பூ விலை மும்மடங்கு உயா்வு: அதே நேரத்தில், பூக்களின் விலை மட்டும் அதிகமாக இருந்தது. குறிப்பாக, சாமந்தி பூ ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டது. இரண்டு நாள்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ சாமந்தி பூ ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.400 முதல் ரூ.500 வரை விலை உயா்ந்துள்ளது. இதனால் சாமந்தி பூ விலை மும்மடங்குக்கும் அதிகமாக உயா்ந்திருப்பது பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.