அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

தனியாரைவிட அரசு விற்பனை நிலையங்களில் கூடுதல் விலையில் விதைநெல்

திருவாரூர் மாவட்டத்தில் தனியார் விதைநெல் விற்பனை நிலையத்தைவிட அரசு விற்பனை நிலையங்களில்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 1:14 pm IST

திருவாரூர் மாவட்டத்தில் தனியார் விதைநெல் விற்பனை நிலையத்தைவிட அரசு விற்பனை நிலையங்களில் கூடுதல் விலைக்கு விதை நெல் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நிகழாண்டு நடைபெறவுள்ள 1.30 லட்சம் ஹெக்டேர் சம்பா சாகுபடியில் சுமார் 77,000 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பும், 53,000 ஹெக்டேரில் நடவுப் பணியும் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 50,000 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்புப் பணி நடைபெற்றுள்ளது. நடவுப் பணிக்காக 91 ஹெக்டேரில் நாற்றுவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது சாகுபடி நிலங்களில் சேற்று உழவு பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

சம்பாவுக்கு சுமார் 3,000 மெட்ரிக் டன் விதை நெல் தேவைப்படுமென கணக்கிடப்படுகிறது. இந்த விதை நெல் அரசின் கூட்டுறவு அங்காடிகள், வேளாண்துறை விற்பனை நிலையங்கள், தனியார் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அரசு விதை நெல் விற்பனை மையங்களில் விதை நெல் கிலோவுக்கு ரூ. 5 மானியம் வழங்கப்படுகிறது. விவசாயத்தையும், விவசாயிகளையும் ஊக்குவிக்கும் வகையில் விதை கிராமத் திட்டத்தை அரசு அறிவித்து அதன்படி ஏக்கருக்கு 20 கிலோ வீதம் 50 சதவீத மானியத்தில் அரசு விற்பனை நிலையங்களில் விதை நெல் விற்கப்படுகிறது.

அரசு அறிவித்த விதை கிராமத் திட்டத்தின்படி விதை நெல் ஏற்கெனவே விதை தீர்ந்து விட்டது என்றும்,  அதனால் 50 சதவீத மானியம் வழங்க இயலாது  என்று விதை வாங்கச் செல்லும் விவசாயிகளிடையே  அரசு அலுவலர்கள் தெரிவிப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது.

எனவே, தனியாரைவிட அரசு விற்பனை நிலையங்களில் விலை குறைவாக இருக்கும் என்ற பொது நியதிக்கு  எதிராக விதை நெல் விலை அதிகரித்திருப்பது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளதால், அரசின் 50 சதவீத மானியத்தில் விதை நெல் வழங்க வேண்டுமென்பது விவசாயிகளின் கோரிக்கை.

இதுகுறித்து வேளாண் துணை இயக்குநர் க. மயில்வாகனன் கூறியது:

திருவாரூர் மாவட்டத்திலுள்ள 137 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் 500 டன் விதை கிராமத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. தவிர 42 வேளாண்மை விரிவாக்க மையங்களில் இத்திட்டத்தில்  200 டன் விதை நெல் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு விற்பனை மையங்களில் சிஆர் 1009 விதை நெல் முடிந்துவிட்டதால், ஆடுதுறை 38, 39, 46 ரக விதை நெல் விற்பனை செய்யப்படுகிறது. விதைப் பண்ணைகளிலிருந்து வேளாண்துறை கொள்முதல்  செய்து நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விதையை  விற்பனை செய்கிறது.

தனியார் விதை நிறுவனங்கள் வியாபார நோக்கில் விலையை குறைத்து விற்பனை செய்வதால் தற்போது  விதை நெல் விற்பனையில் ஏற்பட்டுள்ள  வித்தியாசத்துக்கு காரணம். தற்போது வரை 49,200  ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்புப் பணி நிறைவடைந்துள்ளன. 29,200 ஹெக்டேருக்கான நாற்று  தயார் செய்யப்பட்டுள்ளது என்றார் மயில்வாகனன்.

தனியார் விற்பனை நிலையங்களில் ...

பிபிடி என்ற விதை நெல்

30 கிலோ மூட்டை ஒன்றுரூ. 1,100,

ஆடுதுறை 38, 39 என்ற ரக

விதை நெல்ரூ. 1,050.

அரசு விற்பனை நிலையங்களில்...

பிபிடி விதை நெல் 30 கிலோ மூட்டைரூ. 1,320,

ஆடுதுறை 38 விதை நெல் 30 கிலோ மூட்டைரூ. 1,110,

ஆடுதுறை 39 ரகம் 30 கிலோ மூட்டைரூ. 1,140.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.