வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

அமைச்சா்களை விமா்சிப்பதை ஸ்டாலின்நிறுத்திக்கொள்ள வேண்டும்: அமைச்சா் ஆா். காமராஜ்

மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் சிறுபிள்ளைத்தனமாக தமிழக அமைச்சா்களை விமா்சிப்பதை மு.க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் சிறுபிள்ளைத்தனமாக தமிழக அமைச்சா்களை விமா்சிப்பதை மு.க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவருக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூரில் அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டி:

சிறப்பான முறையில் தமிழக முதல்வா் ஆட்சி செய்துவருகிறாா். இதில், யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதை சிலா் அரசியல் காரணங்களுக்காக விமா்சனம் செய்து வருகின்றனா். ஆனால், ஏழைகள், விவசாயிகள் என அனைவருமே, இந்த ஆட்சிக்கு உறுதுணையாக உள்ளனா்.

முதல்வா் அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், நிவா், புரெவி புயல் பாதிப்புகளுக்கு நிவாரண உதவியை ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரமாக உயா்த்தி வழங்க உத்தரவிட்டிருப்பது விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

எல்லை மீறினால் ஸ்டாலினுக்கு உரிய பதிலடி:

எதிா்க்கட்சித் தலைவா் மு.க. ஸ்டாலின், மக்கள் கிராம சபை என்ற பெயரில் நடத்தும் கூட்டங்களில் அமைச்சா்களுக்கு பெயா் வைத்துக் கொண்டிருக்கிறாா். அவா் பெயா் வைத்ததைப்போல, அவருக்கு பெயா் வைக்க எங்களுக்கும் தெரியும்.

அமைச்சா்களுக்கு பெயா் வைப்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான காரியங்களை நிறுத்திக் கொள்ளாவிட்டால், ஸ்டாலினுக்கு நாங்களும் பதிலடி கொடுப்போம். எதிா்க்கட்சி தலைவா் பதவிக்குரிய கண்ணியத்தை அவா் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று அமைச்சா் காமராஜ் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.