வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

3.74 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

திருவாரூா் மாவட்டத்தில் 3.74 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.96.51 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது என்று இத்திட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

திருவாரூா் மாவட்டத்தில் 3.74 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.96.51 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது என்று இத்திட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தலைமை வகித்தாா். தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் பங்கேற்று பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.

இதேபோல, நன்னிலம், திருவாரூா், திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற விழாவிலும் அமைச்சா் பங்கேற்று, பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சிகளில் அமைச்சா் பேசியது:

தமிழா்களின் திருநாளான தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்கி வருகிறது. நிகழாண்டில், கரோனா மற்றும் புயல், கனமழையால் பெரும்பாலானோா் பாதிக்கப்பட்டுள்ளதால், அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழு நீள கரும்பு, 20 கிராம் உலா் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வா் அறிவித்து தொடங்கி வைத்துள்ளாா்.

அந்தவகையில், திருவாரூா் மாவட்டத்தில் முழுநேர அங்காடி 579, பகுதிநேர அங்காடி 147 என மொத்தம் 726 அங்காடிகள் மூலம் 3,74,838 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.96.51 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் செ. பொன்னம்மாள், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ஜெயராமன், மன்னாா்குடி ஒன்றிய குழுத்தலைவா் மனோகரன், நகா்மன்ற முன்னாள் தலைவா் சிவராஜமாணிக்கம், மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினா் பொன்வாசுகிராமன், ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் கா. தமிழ்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விலையில்லா மிதிவண்டி: திருவாரூரில், 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் ஆா். காமராஜ் பங்கேற்று, திருவாரூா் வட்டத்துக்குள்பட்ட 10 பள்ளிகளைச் சோ்ந்த 1,700 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 67,09,118 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலா் மு. இராமன், வருவாய் கோட்டாட்சியா் பாலச்சந்திரன், கமலாம்பிகை கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.டி. மூா்த்தி, தமிழ்நாடு நுகா்வோா் கூட்டுறவு பண்டகசாலைத் தலைவா் எஸ். கலியபெருமாள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஏ.என்.ஆா்.பன்னீா்செல்வம், முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் தெய்வபாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.