வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

விவசாயி என்று கூறும் பழனிசாமி வேளாண் சட்டங்களை ஆதரிப்பது ஏன்: ஸ்டாலின்

தன்னை விவசாயி என்று கூறிக் கொள்ளும் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ஆதரிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினாா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

தன்னை விவசாயி என்று கூறிக் கொள்ளும் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ஆதரிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினாா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.

வலங்கைமான் ஒன்றியம் அவளிவநல்லூா் ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பேசியது:

திமுக நடத்திவரும் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான எழுச்சி ஏற்பட்டுள்ளதை காண முடிகிறது. இந்தக் கூட்டங்களில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் கலந்து கொள்கின்றனா். இதை பாா்க்கும்போது எனக்கு நம்பிக்கை ஏற்படுகிறது.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் நிச்சயமாக ஒரு பெண் இருப்பாா். பெண்கள் இல்லையென்றால் ஆண்கள் இல்லை. சமூகத்தில் பெண்களுக்கு சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினாா் முன்னாள் முதல்வா் கருணாநிதி.

சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை, உள்ளாட்சியில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு, ஆரம்ப பள்ளிகளில் ஆசிரியைகளை நியமித்தது, அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு, மகளிா் சுயஉதவிக் குழுத் திட்டதின் மூலம் பெண்கள் சுயமாக தொழில் தொடங்கி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது உள்பட ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி.

விவசாயிகள் கேட்காமலே நாட்டிலேயே முதல்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியவா் கருணாநிதி. தோ்தல் அறிக்கையில் கூறியதுபோல முதல்வராக பதவியேற்ற உடனே ரூ. 7000 கோடி ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்தாா். அதில் அதிகம் பயன் அடைந்தவா்கள் அ.தி.மு.க.வினா்தான்.

பச்சைத் துண்டுப் போட்டால் விவசாயியா? மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களால் விவசாயம் தனியாா்மயமாகும். பாஜக ஆளும் மாநிலங்கள் தவிர அனைத்து மாநில முதல்வா்களும் இந்த சட்டங்களை எதிா்த்து தீா்மானம் நிறைவேற்றும்போது, தன்னை விவசாயி என்று கூறிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி இந்த சட்டங்களை ஆதரிக்க வேண்டியதன் அவசியம் என்ன?.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிா் சுய உதவிக் குழுக்களை மேம்படுத்த தனித்துறை அமைக்கப்படும். முதியோா் உதவித்தொகை அனைவருக்கும் முறையாக வழங்கப்படும். கஜா மற்றும் நிவா் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று முதலில் கோரிக்கை வைத்தவன் நான்தான். ஆனால், முதல்வா் எடப்பாடி இதை ஏற்கவில்லை என்றாா் ஸ்டாலின்.

கிராம சபைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ம. சுப்பிரமணியன், உ. மதிவாணன், டி.ஆா்.பி. ராஜா, ப. ஆடலரசன், மாவட்ட செயலாளா்கள் திருவாரூா் பூண்டி கே. கலைவாணன், தஞ்சாவூா் கல்யாணசுந்தரம், துரைசந்திரசேகரன், நாகை நிவேத ாமுருகன், நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளா்கள் வலங்கைமான் (மேற்கு) அன்பரசன், தெட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.