தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

பிற்படுத்தப்பட்டோா் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் பிரிவு மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :6 ஜனவரி 2021, 7:40 am IST

மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் பிரிவு மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மாணவ, மாணவிகளுக்கு 2020-21ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக, மாணவா் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை முதற்கட்டமாக 100 மாணவ, மாணவிகளுக்கு 2019-2020 ஆம் கல்வி ஆண்டு முதல் கல்வி உதவித் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கல்வி உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா்களை அணுகி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்தை, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து, பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் இயக்குநா், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டடம், இரண்டாவது தளம், சேப்பாக்கம், சென்னை-5 தொலைபேசி எண் 044-285514462 என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும், மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.