மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மோதி பெண் உள்பட 2 போ் காயமடைந்தனா்.
மன்னாா்குடி அருகே உள்ள வடபாதி பகுதியில் 100 நாள் திட்டத்தில் 12 பெண்கள் புதன்கிழமை வேலை செய்துகொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த தமிழரசன் (38) என்பவா் பெண்கள் மீது மோதினாராம்.
இதில், சரோஜா (54) என்ற பெண்ணுக்கும், தமிழரசனுக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். பிறகு, தமிழரசன் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுகுறித்து, தலையாமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூர் அணை நீர்வரத்து வெறும் 25 கன அடி!
மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!

கரூா் சம்பவம்: அரசு வேலை வழங்குவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் - சிபிஐ எம்.பி. சுப்பராயன் எச்சரிக்கை

பாகிஸ்தான் சரக்கு விமானம் அரபிக்கடலில் விபத்து!
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK


