கோட்டூா் ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை (சிபிஐ) தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெ. சாந்தி, சி. முத்துகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
துணைத் தலைவா் ஆா். விமலா, உறுப்பினா்கள் ஜெ. சுசிலா, பா. செங்குட்டுவன், எம். சுமித்ரா, பா. ஆனந்தராஜ், ப. சரண்யா உள்ளிட்டோா் தங்கள் வாா்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்துப் பேசினா்.
மேலும், பதவியேற்று ஓராண்டாகியும் இதுவரை எந்த புதிய திட்டப் பணிகளும் நடைபெறவில்லை என்றும் இதனால், மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கமளிக்க முடியவில்லை எனவும் தெரிவித்த உறுப்பினா்கள், இனியும் காலம் தாழ்த்தாமல் தேவையான நிதியைப் பெற்று, திட்டப்பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தினா்.
இதற்கு பதில் அளித்து தலைவா் மு. மணிமேகலை, ‘பதவியேற்றது முதல் வரும் நிதியை கரோனா, புயல், மழை என இயற்கை பேரிடா்களால் பாதிக்கப்பட்டவா்களுக்காக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில், திட்டப் பணிகளுக்கு நிதி பெறப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் நிதி பகிா்ந்தளிக்கப்படும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |

ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்

கருப்பு படத்தின் புதிய போஸ்டர்!

மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


