புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தமிழக காவிரி விவசாய சங்கம் சார்பில் இரண்டாவது நாள் விவசாயிகளின் நீதி கேட்டு நெடும்பயணம் திருவாரூரில் தொடங்கியது.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தமிழக காவிரி விவசாய சங்கம் சார்பில், வேதாரண்யத்திலிருந்து தஞ்சாவூர் வரை விவசாயிகளின் நீதி கேட்டு நெடும் பயணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சனிக்கிழமை வேதாரண்யம் ராஜாஜி பூங்காவிலிருந்து தொடங்கிய பிரசாரப் பயணம் மயிலாடுதுறையில் நிறைவடைந்தது.
இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு விவசாயிகளின் நீதி கேட்டு நெடும்பயணம் துவங்கியது. இதில் விவசாயிகளுக்கு விரோதமான புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்தப் பிரசார பயணத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி ஆர்.பாண்டியன், மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தமிமுன் அன்சாரி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








