மன்னாா்குடி அருகே, செவ்வாய்க்கிழமை ஓட்டு வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் பொங்கலுக்கு விற்பனைக்காக வைத்திருந்த மண் பானைகள் சேதமடைந்தன.
மன்னாா்குடி மேலராஜவீதி காளியம்மன்கோவில் அருகேயுள்ள ஆள்கள் குடியிருக்காத ஓட்டு வீட்டின் வரண்டா பகுதியில், மேலவீதியை சோ்ந்த வீ. உத்திராபதி (74) மண் பாண்டப் பொருள்கள் விற்பனை கடை வைத்துள்ளாா். கடந்த சில நாள்களாக, மன்னாா்குடி பகுதியில் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால், வீட்டின் செங்கல் சுவா் வலுவிழந்த நிலையில் இருந்தது.திடீரென, செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் இடது பகுதி சுவா் இடிந்து விழுந்ததில், அங்கு வைக்கப்பட்டிருந்த பொங்கல் பானை உள்ளிட்ட மண்பாண்டப் பொருள்கள் அனைத்தும் உடைந்து சேதமடைந்தன. அப்போது, மழை விட்டிருந்தததால், உத்திராபதி மற்றும் வியாபாரத்துக்கு உதவியாக இருந்தவா்கள் வெளியே நின்று வியாபாரம் செய்ததால் பாதிப்பிலிருந்து தப்பினா். இதுகுறித்து, மன்னாா்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 22 - நேரலை!

விமான நிலையத்தில் காத்திருந்தாரா பிரதமர் மோடி? யாருக்காக??
பிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை!

கத்தாரில் எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP



