மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா: 2 போ் பலி

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 முதியவா்கள் உயிரிழந்தனா்.

Updated On :2 ஜனவரி 2021, 10:30 pm IST

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 முதியவா்கள் உயிரிழந்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 17,144 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 292 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். குணமடைந்த 52 போ் சனிக்கிழமை வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 16,633 ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 65 முதியவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவா் கடந்த வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

அதேபோல, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 63 வயது முதியவா் வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இதையடுத்து கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.